'25% உண்மைதான்..' சோசியல் மீடியாவில் லீக்காகும் அந்தரங்க வீடியோ.. லக்ஷ்மிமேனன் சொன்ன Shocking Truth..!

பள்ளி படிக்கும் பருவத்திலேயே மலையாள மொழியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். இதனைத் தொடர்ந்து, பிரபு சாலமன் இவரை கும்கி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, சசிகுமார் ஜோடியாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இரண்டும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே அமைத்து தந்தது.
பின்னர், குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லக்ஷ்மி மேனனிடம், கதாநாயகிகளின் அந்தரங்க காட்சி வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது..? என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த லட்சுமி மேனன்,’இதில் 100% பொய் என நான் சொல்ல மாட்டேன். தற்போதைய காலகட்டத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் நமக்கு தெரியாமல் வெளியே லீக் ஆகிவிடுவது இயல்பான ஒன்று. எனவே, இந்த மாதிரி வீடியோவில் 25 சதவீதம் உண்மையாக இருக்கலாம்’ என அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
இவரை போலவே முகபாவனை கொண்ட ஒரு பெண்ணின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருந்த அந்த பெண் அச்சு அசல் லட்சுமிமேனன் போலவே இருந்ததால் பலரும் லட்சுமிமேனன் என்று நம்பினார்கள். ஆனால், அவர் வேறொரு நடிகை என்பது பிறகு தான் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.