'அந்த சீன் எடுக்க சாமியே எங்களுக்கு உதவி செஞ்சுது..' தனுஷ் படத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு, நட்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் கர்ணன். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற சில சீன்கள் மற்றும் வசனங்கள் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஆச்சர்யப்படும்படியான காட்சி ஒன்றை மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
படத்தின் ஒரு முக்கிய காட்சியில் கழுதை மலை மேல் ஏறி வருவது போன்ற காட்சி எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் கழுதை தானாக மலை மேல் ஏறாது என அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர். அதே போல கழுதையும் மலை மேல் ஏறாமலே நின்றுள்ளது.
இதனால் அந்த காட்சியை எடுப்பது கடினம் என மாரி செல்வராஜும் படக்குழுவினரும் எண்ணியுள்ளனர்.
இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பாப்போம் என படத்தில் குல தெய்வமாக வரும் அந்த குழந்தையை தலையில் முகமூடி மாட்டி மலை மேல் நிற்க வைத்துள்ளார்.
அதனை பார்த்த அந்த கழுதை மலைமேல் ஏறி வேகமாக சென்று அந்த குழந்தையின் அருகில் நின்றுள்ளது. பொதுவாக கழுதைகள் அப்படி செய்யாது என மக்கள் அனைவரும் வியப்பாக அதனை பார்த்துள்ளனர்.