சவுக்கு சங்கர் செயலால் லியோ ரிலீஸில் ஏற்படப்போகும் மாற்றம்..? - வெளியான ஷாக்கிங் நியூஸ்..!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வரும் செப்டம்பர் 29ம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பிரபல அரசியல் விமர்சகரும் சவுக்கு இணைய ஊடகத்தின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் செய்த சில செயல்களால் லியோ ரிலீஸில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் துணிவு, நடிகர் விஜயின் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இத்திரைப்படங்கள் அதிகாலை காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதன் காரணமாக கொண்டாட்டத்தில் சில எதிர்பாராத உயிரிழப்புகளும் நேர்ந்தன.
அது மட்டுமில்லாமல் இந்த இரண்டு படங்களையும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது கடுமையான புகார்களை எழுப்பி இருந்தார் சவுக்கு சங்கர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே அதிகாலை காட்சி இல்லாமல் வழக்கமான காட்சி நேரங்களில் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில், லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 11:30 மணிக்குத்தான் வெளியாக வேண்டும் என்றும் அதற்கு முன்பு திரையிடும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில தகவல்களோ, மற்ற திரைப்படங்கள் போலவே வழக்கமான காட்சிகள் தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.