பிரபல தமிழ் நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் போஸ்டர்..!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் ஆடியோ லான்ச் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார்.
நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பேட்டியில் நடிகர் விஜய்யை ஒருமையில் மிஸ்கின் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த பதிவில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.