ஒரு வாய் சோற்றுக்கு எவ்ளோ அவமானம்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் கோபி..? அதிர்ச்சி வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது கோபியாக நடித்து வரும் சதிஷ், தனது இன்ஸ்டாவில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மீண்டும் தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது.
நான் ட்ரை பண்றேன், மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி. நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கு. பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு.
நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர் என பேசியுள்ளார். இதனால் இவர் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முடிவு இருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.