பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி..!
‘நான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தற்போது தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல முகங்களை கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான், பிச்சைகாரன், சைத்தான், யமன், கொலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். சுக்ரன், டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன் முதல் பிச்சைக்காரன் 2 வரை ஏராளமான திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், சில திரைப்படங்களில் பிரபல பாடல்களையும் பாடியுள்ளார்.
இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா, பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மின் விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சாரா, மன அழுத்தத்தில் இருந்து வந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.