'அவர் எனக்கு அப்பா மாதிரி.. இப்படியெல்லாம் பேசாதீங்க' - 2வது திருமணம் குறித்து மீனா Open Talk..!

meena opens up about rumours about her second marriage

1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.

அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

meena opens up about rumours about her second marriage

அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கடந்த வருடம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

meena opens up about rumours about her second marriage

தற்போது, நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. அதுவும் நடிகர் தனுஷை அவர் இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கின்றார் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், நடிகை மீனா இது குறித்து கூறும் போது, ‘நடிகர் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி, அவருடைய மருமகனை இரண்டாவது திருமணம் செய்யப் போவதெல்லாம் கட்டுக்கதை’ என அவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

meena opens up about rumours about her second marriage

Share this post