'தீ தளபதி' பாடலுக்கு விஜயின் வெறித்தனமான பிராக்டீஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் ஷூட்டிங் வீடியோ.!
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. ஷ்யாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளியான இத்திரைப்படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
இப்படம் முதல் இரண்டு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. மக்கள் வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த தீ தளபதி பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.
அந்த வீடியோவில் தீ தளபதி பாடலுக்கு நடிகர் விஜய் அவர்கள் டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடனப் பயிற்சி மேற்கொண்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Thalapathy 😉💥🕺
— ❣️𝐕ιࠝ𝐣ᥲ𝝀❣️ (@Praveen1521v) January 24, 2023
Shooting spot 🕺😘#TheeThalapathy #MegaBlockbusterVarisu pic.twitter.com/UHtxJqjJvz