பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

தமிழ் மொழியில் பொய் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை விமலா ராமன். இதனைத் தொடர்ந்து, மலையாள மொழியில் டைம், சூர்யன், ரோமியோ, கல்கத்தா நியூஸ், காலேஜ் குமரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர், சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் பின்னர், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். இறுதியாக, இருட்டு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது, நடிகர் விமல் அவர்களை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாகவே பிரபல நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது தன்னுடைய பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார் விமலா ராமன்.
விமலா ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய தாய் தந்தை மற்றும் வினய் ஆகியோர் உள்ளனர். எனவே மறைமுகமாக வினையை காதலிப்பதை விமலா ராமன் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விரைவில் இருவரும் தங்களின் திருமண தேதியையும் அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.