'சூப்பர்ஸ்டார்' பட்டம் குறித்த சர்ச்சை.. பதில் கூறி முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. Viral Videos..!
சமீப காலமாகவே, அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஒரு புறமும், கண்டிப்பாக தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என மறுபுறமும் அதிக பேச்சுக்கள் பரவி வருகிறது. மேலும், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது என்றும் கூட சிலர் பேச துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ பட இசை வெளியிட்டு விழாவில், ‘சூப்பர்ஸ்டார் பட்டம் என்றைக்குமே தொல்லை தான்’ என ரஜினிகாந்த் பேசியிருந்தார். இந்த சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து தளபதி விஜய் பேசியுள்ள சில விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒரு முறை விஜய்க்கு விருது வழங்கப்பட்டபோது, தொகுப்பாளினி டிடி ‘உங்களுக்கு தளபதி விஜய்யாக இருக்க பிடித்துள்ளதா அல்லது அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க பிடித்திருக்கிறதா’ என கேட்டார். இதற்கு பதிலளித்த விஜய் ‘நான் என்றும் பழசை மறக்க மாட்டேன். எனக்கு முதன் முதலில் மக்கள் கொடுத்த பட்டம் தளபதி. அதனால் அதிலிருந்து நான் போக மாட்டேன்’ என கூறினார்.
பின்னர், ரசிகர்களுடன் நடந்த நேரடி கலந்துரையாடலில் பேசிய விஜய் ‘என்றும் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான், அவர் தலைவர் மட்டும் தான்’ என கூறினார். மேலும், தொலைக்காட்சி நேரலையில் இதைப்பற்றி கேள்வி எழுந்தபோது ‘அடுத்த சூப்பர் ஸ்டார் என என்னை சொல்லும் போது சந்தோஷமாக உள்ளது.
எந்த துறையிலும் ஒருவர் இருந்தாலும், அந்த துறையில் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பது இயல்பு. ஆனால், என்றைக்குமே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்’ என கூறினார். இப்படி பல இடங்களில் ரஜினிகாந்த் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் என விஜய் கூறியிருப்பதை ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
Fan's fighting Vijay not next superstar but reality Ennana Adhukum mela @actorvijay 🔥#Leo #ThalapathyVijay pic.twitter.com/6VEhVEpPhc
— Leo - The Movie (@sarathvijay967) July 30, 2023