பாக்கியலட்சுமி தொடரில் இனி பாக்கியா இவர்தானா..? ஷாக்கில் ரசிகர்கள்..!

baakiyalakshmi serial telugu version kasthuri acting

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

baakiyalakshmi serial telugu version kasthuri acting

டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை.

இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறார். சிவ சேகர், டேவிட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் Intiti Ghuru Lakshmi என்ற பெயரில் ஒளிபரப்பாகும் வரும் இத்தொடரில் பாக்கியாவாக நடிகை கஸ்தூரி தான் நடித்து வருகிறார்.

முதலில், இவர் தான் இனி பாக்கியாவாக நடிக்க போகிறாரா என ஷாக் ஆன ரசிகர்கள், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் என தெரிந்ததும் சற்று சாந்தம் அடைந்துள்ளனர்.

baakiyalakshmi serial telugu version kasthuri acting

Share this post