"வன்மம் நிறைந்த Fake Reviews & Comments".. நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்து விக்னேஷ் சிவன் பதிவு.!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.
95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தை தயாரித்த இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், இந்த திரைப்படம் பற்றி வன்மம் நிறைந்த ஃபேக் ரிவியூஸ் போடுகிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கு என்று சொல்ல முடியும்? இல்லை என்றால் நெகட்டிவ்வாகத்தான் சொல்ல முடியும். இதை போய் வன்மம் என்று சொல்கிறீர்களே என்று விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
மற்ற எந்த படங்களின் பிரமோஷனுக்கும் வராத நயன்தாரா தனது கணவரின் தயாரிப்பு நிறுவனம் என்ற காரணத்தினாலேயே பிரமோஷன் செய்வதற்கு வந்திருந்தார் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும் அவர் கொடுத்த பேட்டிகளும் வைரல் ஆகியிருந்தது. பின்னர் கனெக்ட் படத்திற்காக எக்ஸ்க்ளூசிவாக பேட்டியும் அளித்தார் நயன்தாரா. மேலும் கனெக்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.
கனெக்ட் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்த ஒருவர் இந்த படம் மிகத் திரில்லிங்கான ஒரு பேய் படமாக வந்திருக்கிறது விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி சோர்வடையாமல் முன்னேறிக்கொண்டே இருங்கள் என்று பகிர்ந்திருந்தார்.
இதை ஷேர் செய்த விக்னேஷ் இவன் உங்களுடைய நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி, வன்மங்கள் நிறைந்த இந்த பொய்யான ரிவியூகள் மற்றும் கமெண்ட்களில் இருந்து எங்களை காத்ததற்கு நன்றி என்று பதில் அளித்து இருக்கிறார். அதற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் படம் சுமாராகத்தான் இருந்தது எல்லாரிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது என விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.