விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்து வீடியோ.. அப்படி என்ன வீடியோ அது? சர்ச்சை வீடியோ நீக்கம்.

தமிழ்நாட்டில் போதை பொருள், குடிபோதை பழக்கம் என்பது பள்ளி செல்லும் மாணவர்கள், சில நேரங்களில் மாணவிகள் ஜாலிக்காக செய்யும் விஷயமாகமாறிவிட்டது. போதை பொருள் என்பது என்னவென்றே தெரியாமல் சிறிய மாணவர்கள் அதற்கு அடிமையாவது தற்போது சமுதாயத்தில் அரங்கேறி வருகிறது. இப்படி பள்ளி மாணவர்கள் போதை பொருளினால் சீரழிவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல சினிமா நடிகர்களும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கூல்லிப்பை பற்றியும் அதனால் சீரழியும் மாணவர்களை பற்றியும் பேசியிருந்தார். இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்கும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இளைஞர்களிடையே போதை பொருள் பற்றி விழிப்புணர்வு செய்யும் வகையில், தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவின் மூலம் ட்விட்டர் பக்கத்தில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக வீடியோ பதிவு ஓன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவு தற்போது சர்ச்சையாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நுண்ணறிவு துறை வெளியிட்ட அந்த வீடியோ பதிவில் விஜய் வாக்கு அளிக்கும் இடத்தில் அங்குள்ள விஜய்யை கவனிக்காமல் அதிகாரிக்கு கைகொடுத்து வாக்காளர் செல்லும் காட்சியை மையமாக கொண்டு. நடிகர் விஜய்யை போதை பொருள் என்றும் அதிகாரியை நல்ல வாழ்க்கைக்கான பாதை என்றும் சித்தரித்து. நம்முடைய வாழ்கையில் இது போலவே போதை பொருளை கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்ற நல்ல கருத்துடன் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநில போதை பொருள் தடுப்பிற்கான நுண்ணறிவு துறையையும், அந்த பொருள் அதிகாரியான எஸ்.பி ரோஹித் நாதனையும் சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த வீடியோவிற்கு வந்த எதிர்ப்பின் காரணமாக இந்த வீடியோவை தமிழக காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.
Be the Doss anna of your gang😎😎 kodi ruba kuduthalum Sila vishayatha seyya koodadhu. #enakkuvendam #namakkuvendam pic.twitter.com/Y8H93thzxX
— enforcementbureautn (@drugfreetn) December 15, 2022