இரவு பார்ட்டியில் போதை தலைக்கேரி ஆட்டம்? வாய்ப்பில்லாமல் காணாமல் போன ஸ்ரீ திவ்யா

sri divya not getting chances due to overdrink in party rumours viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார் ஸ்ரீதிவ்யா. இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி, பென்சில், காஷ்மோரா, மருது போன்ற படங்களில் நடித்து வந்தார்.

sri divya not getting chances due to overdrink in party rumours viral

இறுதியாக, சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்த இவர், இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் ஓவர் மதுவால் தனது பெயரை கெடுத்துக்கொண்டது தானாம். அதாவது, சின்னத்திரை தொகுப்பாளராகவும் ஒருசில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தவர் இமான் அண்ணாச்சி.

sri divya not getting chances due to overdrink in party rumours viral

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடினை கட்டியுள்ளார். இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார்.

sri divya not getting chances due to overdrink in party rumours viral

பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும். அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஸ்ரீதிவ்யா அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியதாக சொல்லப்படுகிறது.

sri divya not getting chances due to overdrink in party rumours viral

உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத அவரை, தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் வெடித்ததால் நடிகை ஸ்ரீதிவ்யா வெளியில் தலைக்காட்ட முடியாமல் அவதிப்படுவதாகவும், வாய்ப்பு கேட்டு போகும் இடத்தில் இந்த விஷயத்தை பற்றி கேட்பதால் அசிங்கப்பட்டு கிளம்பி விடுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Share this post