வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? வெற்றிமாறன் தரப்பு விளக்கம் இதோ..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.
மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும், விருதுகளையும் பெற்று தந்தது
தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகவிருந்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்த நிலையில், இதைத் தொடர்ந்து இவர் நடிக்க இருந்த ‘வாடிவாசல்’ படத்தில் இருந்தும், விலக வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘வணங்கான்’ படம் ட்ராப் ஆனதற்கு இயக்குனர் பாலா தான் முழு காரணம் என்றும், சுமார் 10 கோடி வரை சூர்யாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் இருந்து விலகி விட்டதால், தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சுதா கொங்கரா உள்ளிட்ட சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்த ஒப்பந்தமான வாடிவாசல் திரைப்படத்தின், டெஸ்ட் சூட் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகாமல் உள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும், ‘விடுதலை’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
எனவே சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எழுத அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகாத நிலையில், வெற்றிமாறன் தரப்பிலிருந்து… வெளியாகியுள்ள தகவலின்படி இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், கூடிய விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.