‘அவங்க வாய மூட முடியாது’.. சின்மயி கமண்ட்டிற்க்கு அர்ச்சனா பதிலடி.. வைரலாகும் வீடியோ..
மாடலிங், விஜே தற்போது சீரியல் நடிகை என அடுத்தடுத்து வெற்றி பாதையை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்தவர். அதனைத் தொடர்ந்து, யூடியூபில் குறும்படங்கள், வெப் சீரீஸ் என இளசுகள் மத்தியில் செம பேமஸ்.
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், தனது அழகான தோற்றம், சேலை காட்டும் விதம் என இவரது appearance’க்கு இளம் பெண்கள் வட்டாரத்தில் இவர் பாப்புலர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா, மாடர்ன் உடைகள், ரீல்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் பாலோயர்ஸ்களை குவித்து வருகிறார். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவவ்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது. சமீபத்தில் சீரியல் நடிகை அர்ச்சனா வைரமுத்துவை பார்த்து ஆசிப்பெற்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல விதமான கமெண்ட் மற்றும் விமர்சனங்கள் கிளம்பின. மேலும், அந்த புகைப்படத்திற்கு பாடகி சின்மயி எச்சரித்து கமெண்ட் செய்திருந்தார். அதில், ஆரம்பத்தில் இப்படித்தான் துவங்கும், தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள் தள்ளியே இருங்கள். யாரையாவது உடன் அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியிருந்தார். இந்த கமெண்டை அர்ச்சனா டெலிட் செய்திருக்கிறார்.
ஒரு சிலர் அர்ச்சனா டெலிட் செய்த கமெண்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. வைரமுத்து குறித்து இவர் கமெண்ட் செய்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனாவிடம் வைரமுத்து குறித்த பதிவில் சின்மயி போட்ட கமெண்ட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘நான் எப்போதும் போல அதை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாக்கு செவந்தவரை என்ற பாடல் தான்.
நான் படப்பிடிப்பில் இருந்த போது அவரை திடீரென்று மேடையில் சந்தித்ததும் நான் ஹாய் சார் எப்படி இருக்கிறீர்கள் நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சொன்னதும் அவர் என்னை ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் நான் அவரிடம் பேசி இருந்தேன். எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட்.. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும்’ என்று கூறியுள்ளார்.