ஹனிமூன் ட்ரிப் இல்ல.. அஜித் படத்துக்காக ஃபாரின் ட்ரிப் சென்ற விக்கி - நயன்.. விஷயம் என்ன தெரியுமா ?

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

இந்நிலையில், தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் பார்சிலோனா சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதனால், இவர்கள் 2வது முறையாக தேனிலவு சென்றுள்ளதாக ரசிகர்கள் கூறி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

தற்போது பார்சிலோனாவில் எடுத்த ஸ்டில்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

இதை தொடர்ந்து, தற்போது விக்கி மிகவும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது போல விக்னேஷ் சிவன் போட்டோ ஷேர் செய்துள்ளார்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்ததும் நயன்தாரா உடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றார் விக்னேஷ் சிவன். அவர்கள் இருவரும் இரண்டாவது ஹனிமூனை கொண்டாடத்தான் அங்கு சென்றுள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் அங்கு சென்றதற்கான காரணமே வேறயாம்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான location பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளாராம். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இருவரும் ஜோடியாக சென்று ஜாலியாக location தேர்வில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

vignesh shivan and nayanthara foreign trip reason getting viral

இதன்மூலம் ஒருபக்கம் நயன்தாராவுடன் சுற்றுலா, மறுபக்கம் AK62 படத்திற்கான location தேர்வு என பிளான் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். அங்கு 10 நாட்கள் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, சென்னை திரும்பியதும் நயன்தாரா, சென்னையில் நடக்க உள்ள ஜவான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். மறுபுறம் விக்னேஷ் சிவன் ஏ.கே.62 பட வேலைகளை தொடங்க உள்ளார்.

Share this post