CWC பைனலில் பங்கேற்காமல் பாதியில் வெளியேறியது ஏன்? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த ரக்க்ஷன்
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. கலக்கப்போவது யாரு சீசன் 5 6 7 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரக்ஷன் கடந்த பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாக சொல்லப்பட்டது.
விஜய் டிவின் முக்கிய தொகுப்பாளரான இவர், விரைவில் ஹீரோவாக இருக்கிறார். யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அதன் பூஜை புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி finalsல் பங்கேற்கவில்லை. இதனால் பல கேள்விகள் எழுந்தன. இதனால் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து, ஒரு பேட்டியில் ரக்ஷனிடம் கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை என கூறியுள்ளார்.