54 வயதில் திருமணம் ? வெளியான தகவல் குறித்து பிரபல தமிழ் நடிகர் விளக்கம்

sj surya marriage rumours getting viral on social media

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

sj surya marriage rumours getting viral on social media

தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இப்படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

sj surya marriage rumours getting viral on social media

கடந்த 5 வருடங்களாக, சிறந்த கதையாக இருந்தால் வில்லன் கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்து வருகிறார். இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

sj surya marriage rumours getting viral on social media

தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

sj surya marriage rumours getting viral on social media

தற்போது, விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். வில்லன் நடிகராக சினிமாவில் பிசியாகி இருக்கும் அவருக்கு விரைவில் திருமணம் என தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. 54 வயதில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்ப்பதாக கூறப்பட்டது.

sj surya marriage rumours getting viral on social media

இந்நிலையில், இது பற்றி விளக்கம் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, “இந்த செய்தி உண்மை இல்லை. நான் திருமணம் பற்றி யோசிக்க கூட இல்லை” என தெரிவித்து இருக்கிறார். மேலும் தற்போது கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும் தான் இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார்.

Share this post