விஜய் சேதுபதி வெளியிட்ட 'விடுதலை' பட புகைப்படங்கள்.. வெற்றிமாறன் வேற லெவல்'ல ரெடி பண்றாரு போல !

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை.

இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஷூட்டிங் எடுக்கப்பட்ட இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் எடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடிக்கும் நடுவிலே இப்படத்தில் கலந்து கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே வித்தியாசமாக இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

தற்போது விடுதலை படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்களை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த நான்கு புகைப்படங்களில், சூரி, வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் உள்ளன.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

அதில் விஜய்சேதுபதி காலில் Knee cap அணிந்தபடி விஜய்சேதுபதி இருக்கிறார்.

இதனால் மக்கள் செல்வனுக்கு அடிபட்டுள்ளதா என ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

Viduthalai shooting spot photos shared by vijay sethupathi

Share this post