'டிமான்ட்டி காலனி - 2' இயக்குனர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

Ajay gnanamuthu announces about demonte colony part 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படம் டிமான்டி காலனி.

திரில்லர் படமான இப்படம் 2015ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ajay gnanamuthu announces about demonte colony part 2

மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், நல்ல வசூலும் செய்த இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேச்சு எழுந்து வந்தது.

Ajay gnanamuthu announces about demonte colony part 2

முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த அஜய் ஞானமுத்து, நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்டோரை வைத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார்.

இப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Ajay gnanamuthu announces about demonte colony part 2

இதன் பின்னர், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக படத்தின் பணிகள் தாமதமாகி வந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Ajay gnanamuthu announces about demonte colony part 2

தற்போது, டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அறிவிப்பை டிமான்டி காலனி முதல் பாகம் வெளியான (மே 22, 2015) 7 ஆண்டுகள் கழித்து அதே நாளில் இதன் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2” படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ajay gnanamuthu announces about demonte colony part 2

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share this post