யாருமே கேட்கல, கமல் கூட.. விசித்ராவின் கணவர் எமோஷனல் பேட்டி..!

vichitra-husband-speak-bala-krishna

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி பேசி இருந்தார். அதில், அவர் குறிப்பிட்ட ஹீரோ பாலகிருஷ்ணா தான் என்று நெட்டிசன் ஒரு பக்கம் அவரை விளாசி வருகின்றனர்.

இதனிடையே, இது தொடர்பாக பேசிய விசித்ராவின் கணவர், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் நானும் விசித்ராவும் நண்பர்கள் கூட இல்லை சக மனிதாக மட்டுமே விசித்ராவுக்கு உதவினேன்.

vichitra-husband-speak-bala-krishna

இது எங்களுடைய பிரச்சனை என்று அந்த பிரபல நடிகர் தன்னை மிரட்டியதாகவும், திருமணத்திற்கு பின்பும் இது தொடர்பான வழக்குகள் நடந்தது. ஆனால், நடிகர் சங்கம் இதை முடித்து வைக்க மட்டும் போராடினார்கள். யாருமே தங்களுக்கு துணையாக அந்த சமயத்தில் நிற்கவில்லை. கமல்ஹாசன் கூட இந்த டாபிக்கை பிக் பாஸில் பேச மாட்டார் என்று விசித்ராவின் கணவர் ஷாஜி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Share this post