பிக் பாஸ் மீது செருப்பை தூக்கி வீசிய பூர்ணிமா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்- வைரல் வீடியோ..!

poornima-through-slipper-in-bigg-boss

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பற்ற போட்டியாளர், பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறி பிரதீப் ஆண்டனியின் வாதத்தை கூட கேட்காமல் கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

முன்னதாக பிக் பாஸ் கேம் ஷோ என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து விதி மீறல்களில் பூர்ணிமா மற்றும் மாயா ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது, தனியாக போய் பேசுவது மைக்கை ஆப் செய்து ஓரமாக வைத்துவிட்டு கிசுகிசு பேசுவது மற்ற போட்டியாளர்களை பற்றி பேசுவது என பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை போட்டியாளரை மட்டுமே திட்டி தீர்த்த பூர்ணிமா கமலை திட்டி தீர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

poornima-through-slipper-in-bigg-boss

அதாவது, தனது செருப்பை எடுத்து சுவருக்கு மேல் தூக்கி வீசுகிறார் பூர்ணிமா. இப்படி செய்ய வேண்டாம் என மற்ற போட்டியாளர்கள் கூறியும் கேட்காமல் செருப்பை தூக்கி வீசிகிறார். இதை கவனித்து ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Share this post