இந்த படத்தோட 2ம் பாகமா ? கவுதம் மேனன் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார்.
சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 10 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில், சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் - சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து, சிம்பு - உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளனர்.
இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவர் அறிவித்துள்ளார்.
முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார். முதல் பாகத்தில் சிம்பு சாதாரண இளைஞனாக இருந்து எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை காட்ட உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் அவரின் கேங்ஸ்டர் வாழ்க்கை குறித்து காட்ட உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.