திருச்சிற்றம்பலம் - பிளாக்பஸ்டர் ஹிட்.. நடிகைகள் இன்றி நடந்த சக்சஸ் பார்ட்டி.. வைரலாகும் போட்டோஸ்
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழி ஷோபனாவாக நித்யா மேனன், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர்.
மூன்று நாயகிகளில் தனுஷ் யாருடன் ஜோடி சேர்வார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பிரியா பவானி சங்கர் கிராமத்து லுக்கில், ரஞ்சனி கதாபத்திரமாக நம்மை கவர்கிறார். ராசி கண்ணா தனுஷுடன் செம கெமிஸ்ட்ரியை கொண்டு வந்துள்ளார். அனுஷாவின் சித்தரிப்பு பார்வையாளர்களை அவர் மீது காதல் கொள்ள வைக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிருத். அவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால், இந்த படத்தின் வெற்றி அவருக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது. இப்படத்தின் வெற்றியால் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் நானே வருவேன், வாத்தி போன்ற படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் தனுஷ் கொடுத்துள்ளார். அதில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் தனுஷ் கொடுத்த இந்த சக்சஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோயின்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.