"மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன்.." தீயாய் பரவும் நடிகை வரலக்ஷ்மி பதிவு – யார சொல்றாங்க..?
பிரபல நடிகர் சரத் குமார் அவர்களின் மகள் வரலக்ஷ்மி சரத் குமார். பாய்ஸ், காதல், சரோஜா போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக இவரை அனுகியபோது இந்த வாய்ப்புகளை நிராகரித்தார் வரலக்ஷ்மி.
இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் அறிமுக இயக்குனராக இயக்கிய போடா போடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இவருக்கு கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்பட வாய்ப்புகள் வரவே அதிலும் நடித்து வந்தார். தமிழில், பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான போல்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக நிறைய பாராட்டுக்கள் பெற்றார்.
பின்னர், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற திரைப்படங்களில் நடித்தார். முக்கியமாக, சண்டக்கோழி 2 மற்றும் சர்க்கார் படத்தில் செம வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரி 2, நீயா 2, டேனி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்போது பதிவிட்டுள்ள பதிவு ஒன்று செம வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், “நான் மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன்.. நீ என்னுடைய பட்டியலில் இருக்கிறாய்..” என்று கொடூரமாக சிரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யாரை சொல்றாங்க வரலக்ஷ்மி என கமெண்ட் செக்ஷனில் கேட்டு வருகின்றனர்.