'என் அப்பா இறந்தது ஒரு விதத்தில் சந்தோஷம் தான்' - நடிகர் மாரிமுத்து மகன் பேட்டி.. தெரியாத மறுபக்கம்..!
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் வரை ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகராக கலக்கி வந்தவர்.
சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் முக்கிய காரணம்.
இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி செம ட்ரெண்ட் ஆகி வந்தது. இந்நிலையில், டப்பிங்கிற்காக கடந்த 8ம் தேதி காலை டப்பிங் ஸ்டூடியோ சென்ற மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தையின் இறப்பு குறித்து பேசிய மாரிமுத்துவின் மகன், தனது தந்தை இந்த நேரத்தில் இறந்தது ஒரு விதத்தில் சந்தோசம் தான் என கூறியுள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என நிறைய போராடி, கஷ்டப்பட்டு இருந்ததற்கு நல்ல பலன் கிடைத்தது.
கடந்த ஒரு வருடமாக நல்ல பெயரும் புகழும் அவரை வந்தடைந்தது. தனது திறமையை நிரூபித்து நினைத்ததை செய்துகாட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார். அவரது திறமை மக்களுக்கு தெரியாமல் போயிருந்தால் தான் வருத்தமாக இருந்திருக்கும் என உருக்கமாக பேசியுள்ளார்.