'செல்வராகவனை விட தனுஷ் அதுல Best..' மறைக்காமல் பேசிய சோனியா அகர்வால்..!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தவர் நடிகை சோனியா அகர்வால். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
3 டாப் ஹிட் படங்களில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் காதல் ஏற்பட்டு இயக்குனர் செல்வராகவன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணத்தினால் 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சோனியா அகர்வால், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், நான் காதல் கொண்டேன் படத்திற்கு நடிக்க வந்தபோது தனுஷை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா? என என் அம்மா கேட்டு வந்தார்.
பின்னர் நான் என் அம்மாவிடம், செல்வராகவன் மிகச்சிறந்த இயக்குனர். அவர் தன் படங்களுக்கு சரியான நடிகர்களை தான் தேர்வு செய்வார். அப்படித்தான் தனுஷின் ரோல் படத்தில் இருக்கும் என எடுத்துக்கூறினேன் என கூறினார்.
உண்மையில் சொல்லப்போனால் செல்வராகவனை விட தனுஷ் ரொம்ப நல்லவர்.
படப்பிடிப்பின் போது காட்சிகள் சரியாக வரவில்லை அல்லது நாங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் செல்வராகவன் மோசமாக திட்டிவிடுவார். அதன்பின்னர் சீன் நன்றாக வந்தாலும் ஷூட்டிங் பின் கூட சமாதானம் செய்யமாட்டார். தனுஷ் வந்து தான் அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என சொல்லுவார். அந்த குணம் தனுஷிடம் இருக்கிறது என சோனியா அகர்வால் கூறினார்.