'தூங்கும்போது என் வாயிலிருந்து அதை எடுத்துடுவாங்க..' ரம்யா பாண்டியன் Open Talk..!
அரசியல் சார்ந்த கதையை எதிரொலிக்கும் வகையில் 2016ம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த ஆண்டிற்கான ‘தேசிய விருதை’ இப்படம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகபோல்ட் ஆன முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆண் தேவதை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால், போறாத காலம் திரைப்படம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவர் பெயர் பெரிதும் புகழ் பெறவில்லை.
வெற்றித் திரைப்படங்கள் இரண்டு கை கொடுக்காத நிலையில், கேசுவலாக, மொட்டை மாடியில் இவர் செய்த கிளாமர் போட்டோஷூட் ஓவர் நைட்டில் தென்னிந்திய அளவில் பிரபலம் அடைய செய்தது.
பிரபல நடிகர் அருண் பாண்டியன் இவருக்கு சித்தப்பா ஆவர். போட்டோஷூட் புகழ் அடைந்த போதிலும், மக்கள் வரவேற்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது. பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் போவதற்கு காரணம் தெரியவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம், டிவி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் பெற்றாலும், ஆர்மிகள், fan பாலோயர்ஸ் யாரும் இவரைக் கைவிடவில்லை. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒவ்வொரு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சினிமா, டிவி, சீரியல் என யாரோட சப்போர்ட் இல்லாத போதிலும் போட்டோஷூட் மூலமாகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. சிறு வயதில் பல் ஆடினால் அந்த பல்லை பிடுங்கி படுக்கைக்கு கீழே வைத்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்போம். அந்த மாதிரி ஏதேனும் விளையாடி இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரம்யா பாண்டியன், “அப்படி விளையாடினது கிடையாது என் பல் ஆடினால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் வாயிலிருந்து அதனை பிடுங்கி விடுவார்கள். நான் முழித்திருந்தால் நான் சத்தம் போடுவேன் என்பதால் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது டக்கென்று பிடுங்கி விடுவார்கள்” என கூறியுள்ளார்.