"ஆமா மேலாடை இன்றி அந்த காட்சியில நடிச்சேன்" - வெளிப்படையாக பேசிய நீலிமா ராணி
ஒரு பெண்ணின் கதை என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கிய நீலிமா ராணி, தேவர் மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து, ப்ரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நீலிமா ராணி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
அதிலும், அத்திப்பூக்கள், தென்றல், வாணி ராணி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமாவின் அழகிற்கும் திறமைக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இதற்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். சின்னத்திரை தொடர்கள், திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நீலிமா மேலாடை இன்றி நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீலிமா, “1947 திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் நடித்தது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை. இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே நடித்துக் கொடுப்பேன்.
எல்லோரும் நினைப்பது போல எனக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை, இயல்பாக நடித்தேன்.
இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் அதை தாண்டியும் நடித்துள்ளார்கள் அதற்கு முன்பு நான் அப்படி நடித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை” என்று கூறியுள்ளார் நீலிமா.