லோகேஷ் சொன்ன சீனை 'ஜெய்லர்' படத்தில் வைத்த ரஜினி.. அதுவும் இந்த சீன்'ஆ..? கடும் அப்செட்டில் லோகேஷ்.!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு பிறகு தலைவர்171 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், லோகேஷ் இதில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் காரணம், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது லோகேஷ் மற்றும் ரஜினி கதை விவாதத்திற்காக சந்தித்து வந்துள்ளனர். அப்போது லோகேஷ் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் லியோ படம் குறித்து விசாரித்த ரஜினி, காட்சிகள் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று பேசியுள்ளனர்.
அப்போது லோகேஷ் லியோ படத்தின் ஒரு காட்சியை பற்றி சொல்லி இருக்கிறார்.
அதைக் கேட்ட ரஜினி அப்படியே அந்த காட்சியை பற்றி நெல்சனிடம் கூறி லோகேஷ் சொன்ன அந்த சீனை ஜெயிலர் படத்தில் வைத்துள்ளனர். படம் ரிலீசான பிறகு இது லோகேஷுக்கு தெரிந்திருக்கிறது.
இதனால் ரஜினி மீது பயங்கர அப்சட்டில் லோகேஷ் இருக்கிறார் என்றும், தலைவர்171 படத்தை கைவிடும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தில் வரும் ஸ்னிப்பர் ஷாட் சீனை தான் லோகேஷ் கூறியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
Let's Wait till Oct 19 ! In #Leo also had that Sniper - Shot Scene ( That Rajinikanth copied from Thalapathy Vijay's #Leo - While narrating #Leo story to Rajini - By Loki )
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) September 10, 2023
If Someone Claims that It had been copied from Nelson's Jailer.. Appo irukku di .. ungalukku !!!… pic.twitter.com/gbapaEhlaG