யானை படத்தை பார்த்த வனிதா விஜயகுமார்.. தன் அண்ணனுக்கு வெளியிட்ட பதிவு !
சாமி திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இதனைத் தொடர்ந்து, சூர்யா, விஷால் போன்ற பிரபல முன்னணி தமிழ் நடிகர்களை கொண்டு வெற்றி படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில், வெளியான சிங்கம் திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு பெரும் அடையாளமாக மாறியது.
மேலும், வேல், தாமிரபரணி, வேங்கை, பூஜை போன்ற நல்ல திரைக்கதைகளை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை அறிமுக படுத்தினார்.
இந்நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு, இவரது இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, யோகி பாபு, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானி திரைப்படம் யானை.
இப்படம் ஜூன் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள யானை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் சண்டை, அழுகை என இருக்க ட்ரைலர் வீடியோ திரைப்படம் குறித்தான ஆர்வத்தினை தூண்டியுள்ளது.
கதை ராமநாதபுரத்தை சுற்றி நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊரில் மதிப்பு மிக்க PRV குடும்பத்தை சேர்ந்தவர் அருண்விஜய். இளைய மகன் கதாநாயகன் ரவிச்சந்திரன் ரோலில் நடித்துள்ளார். எதிரியாக ஜெயபாலன் (சமுத்திரகனி ), அவரது மகன் லிங்கம் (ராமச்சந்திர ராஜு).
அதோடு நாயகனின் உறவினரான வில்லன் தனது குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு ரவிசந்திரன் குடும்பம் தான் காரணம் என எண்ணி அவர்களை கொல்ல முனைகிறார். இதில் நாயகன் எவ்வாறு தனது குடும்பத்தை காத்து நிற்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
இன்று ஜூலை 1 வெளியான இந்த படம் கிராமத்து நாயகனின் கதையாக அமைந்து வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அருண்விஜய்யின் சகோதரியான வனிதா விஜகுமார், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய் , வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா, அனிதா, கவிதா - 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் அருண் மூத்த மனைவியான முத்துக்கண்ணுவின் மகன்.
வனிதா உள்ளிட்ட சகோதரிகள் இரண்டாவது மனைவியும் நடிகையுமான மறைந்த மஞ்சுளாவின் பிள்ளைகள். மொத்த குடும்பத்துக்கும் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக விஜயகுமார் மொத்த குடும்பமும் அவரை விலக்கி வைத்துள்ளது. இருந்தும் வனிதா தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து உட்பட எந்த முக்கிய தருணங்களிலும் தனது வாழ்த்துக்களை பகிர மறப்பதில்லை.
Wishing team #Yaanai all the very best … hard work & persevarance never fails pic.twitter.com/jBW0d0tvSi
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 1, 2022