உடல்நிலை பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு !

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

2000ம் ஆண்டு தனது தந்தையின் சூப்பர் ஹிட் படமான ‘ஹே ராம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், 2009ம் ஆண்டு, ‘லக்’ என்னும் பாலிவுட் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். பின்னர், சூர்யாவுடன் இவர் நடித்த ‘7ஆம் அறிவு’ படம் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 3, வேதாளம், புலி, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது சினிமா பயணத்தில் தனுஷ் உடன் இவர் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் இவருக்கு பெரிய மைல்கல் ஆனது.

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி, தனது கவர்ச்சி உடை, கிளாமரான போஸ் கொடுத்து போட்டோஷூட் என இணையத்தை திணறடித்து இளசுகளை திண்டாட வைத்தும் வருகிறார். இந்நிலையில், தனது மார்க்கெட்க்காக தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவவ்போது பதிவிட்டு வருகிறார்.

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ என பதிவிட்டு வருகிறார்.

Shruthi haasan openly shares about her pcod and pcos issue

இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தான் மோசமான PCOS என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. PCOS மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன். இதனால், சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள்.

எனவே, இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கையாளுவதற்கு ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இதனை நான் ஒரு போரட்டமாக பார்க்காமல், என் உடல் அதன் சிறந்ததைச் செய்யும் ஒரு இயல்பான இயக்கமாக அதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த ஒரு சவாலான பயணம். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

இன்றைய நவீன வாழ்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு PCOS மற்றும் PCOD பிரச்சனை ஏற்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, PCOS மற்றும் PCOD பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post