ஆபாச வார்த்தைகள்.. சண்டை.. பிக்பாஸ் குறித்து வனிதா ட்விட்டர் பதிவு

Vanitha posted tweet about biggboss ultimate show

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவு பெற்றுள்ளது. முதல் 4 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்று ஆனால் 5வது சீசன் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மொழியை போலவே தமிழில் OTT தளத்திற்கான BB Ultimate ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

இது 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகிறது. இதில் முதல் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களின் சிலரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பியுள்ளனர். வனிதா மட்டும் சில பல காரணங்களினால் வெளியே வந்து விட்டார்.

இந்நிலையில், இதில் தகாத வார்த்தைகள், அடிதடி, சண்டை என பல அரங்கேறி வருகிறது. அதிலும், நிரூப், அனிதா உள்ளிட்டோர் சில ஆபாச வார்த்தைகள் பேசவே அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனால் வனிதா பகிரங்கமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vanitha posted tweet about biggboss ultimate show

Share this post