'நான் வீட்டுக்கு வந்தா சாப்பாடு கொடுப்பீர்களா' என முதல்வர் கேட்க 'கறிசோறே போடுவோம்' என வீடியோ காலில் கூறிய மக்கள் !

Stalin video call with avadi people to know their wantings

கல்வி, குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளுக்காக குருவிகார இனத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி உள்ளிட்டோர் தமிழக முதல்வரிடம் பேசிய வீடியோ கால் இணையத்தில் வைரல் ஆகிறது. அப்போது, ஆவடி குறவர் சமூக மக்களிடம் காணொளி வாயிலாக குறைகளை கேட்டறிந்தார் முதல்வர்.

ஒரு பேட்டியில் இவர்கள் பேசியபோது “நீ இந்த ஜாதி பொண்ணு, பக்கத்துல உக்காராதனு” கூட படிக்கும் மாணவ/மாணவியரே சொன்னதை கூறியிருக்கின்றனர்.

இதனால், முதல்வர் ஸ்டாலின் அவர்களை வீடியோ காலில் பார்த்து நம்பிக்கையூட்டினார். அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

மேலும், இன்று அந்த சமூக மக்களிடத்தில் அமைச்சர் நாசர் உதவியோடு காணொளி வாயிலாக குறைகளை கேட்டறிந்து அதையும் உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்களித்தார். அப்போது, அப்பகுதி மக்கள் முதல்வரை தங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

“நான் வந்தால் சாப்பாடு கொடுப்பீர்களா?” என கேட்ட முதல்வருக்கு “கறிசோறே போடுவோம்” வீடியோ காலில் கரகோஷம் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.

Share this post