ரூ.110ஐ கடந்த பெட்ரோல் விலை.. சதமடித்த டீசல் விலை.. திண்டாடும் மக்கள் !

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 13வது முறையாக அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது.
நாடு முழுவதும் இன்று 13வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளுக்கும் அதிகரித்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.109.34க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 75 காசு அதிகரித்து ரூ.110.09க்கு விற்கப்படுகிறது. டீசல் ரூ.99.42ல் இருந்து 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18 ஆக விற்பனையாகிறது.
கடந்த 15 நாட்களில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இவ்விலையேற்றத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. கேஸ் சிலிண்டர் விலையேற்றமே மக்களை திண்டாட வைத்து வரும் நிலையில், இந்த விலையேற்றம் இனி எங்கெல்லாம் கொண்டு போய் விடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.