"அவளுக்கு அறிவே இல்ல.. பட்டா தான் புத்தி வரும்.." பிக்பாஸில் ஜோவிகா செயல் குறித்து திட்டித்தீர்த்த வனிதா!
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய். 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர்.
ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார். பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர்.
2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார். பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தது குறித்து அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், இவரது மூத்த மகளான ஜோவிகா தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி வந்த ஜோவிகா, தற்போது மாயா - பூர்ணிமாவுடன் இணைந்து ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் குறித்து விமர்சனம் செய்து வரும் வனிதா, தன்னுடைய மகள் அடிக்கடி கீழே விழுவதும், அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது குறித்தும் பேசியுள்ளார்.
“ஜோவிகாவுக்கு அறிவே இல்லை, வீட்டில் இருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ஆலம்பாக்கத்தில் அப்பா வீட்டில் இருக்கும் போதும் சரி.. எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பார். அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஒரு Runner. பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என சொல்லிவிட்டேன். கேட்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும். விழுந்து நல்ல அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும்” என பேசியுள்ளார். இதனை சிலர் கலாய்த்து வருகின்றனர்.
திங்கிறது தூங்குறது ஜாக்கி கலட்டுவது💁
— ⚜️HAKEEM BAVA⚜️ (@MdHakeembava) November 22, 2023
BB 7 finalist 🥴#Jovika😝#BiggBoss7Tamil #BiggbossTamil7 pic.twitter.com/bnqCwReZyK