விஜய் பட ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு.. 'தமிழ் ரசிகர்களுக்கு கஷ்டகாலம்' என விமர்சித்த நடிகர் ஜெய்..
நடிகர் விஜய் தம்பியாக பகவதி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த சென்னை 600 028, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தமிழ் திரையுலகில் தனி இடத்தை பெற்றுத் தந்தது.
மேலும், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குற்றம் குற்றமே. பல திரைப்படங்களில் நடித்த போதிலும், தனக்கென சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இடம் ஏதும் கிடைக்காமல் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நடிகர் விஜய் படத்தை பற்றி விமர்சித்து பேசியுள்ளார்.
2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தமிழக மக்களுக்கு கஷ்டகாலமான நாள். ஏனெனில், அந்த சமயத்தில் தான் பகவதி திரைப்படம் வெளிவந்தது. இதை சொன்னவுடன் யாரும் பயப்பட வேண்டாம். அன்று வெளியான பகவதி படத்தின் மூலமாகத்தான் நான் சினிமாவிற்குள் அறிமுகமானேன்.
அதில் நான் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பேன். அதைத்தான் நான் அப்படி கூறினேன். நான் நடிகர் விஜய்யை பற்றி விமர்சிக்கவில்லை என்று அவர் கூறியு ள்ளார்.