நிக்சன் கிட்ட இருந்து ஐஷு-வ காப்பாத்துங்க.. வனிதா & ஐஷுவின் தந்தையுடன் பிரதீப்பின் உரையாடல்.. தீயாய் பரவும் Whatsapp Screenshot..!
சின்னத்திரையில் முக்கிய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக மக்கள் ஆவலுடன் பார்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.
தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே, ரெட் கார்டு, bully gang, மரியாதையின்மை, விதிமீறல் என பல விதமான கோணங்களில் சுவாரசியம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்களில் அனன்யா மற்றும் விஜய் வர்மா மீண்டும் வைல்டு-கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.
வந்த உடனேயே, வீட்டில் உள்ளோரின் முகத்திரைகளை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பிய பஞ்சாயத்து இன்னும் வீட்டிற்குள்ளும் சரி, வெளியே சமூக வலைத்தளங்களிலும் சரி குறைந்தபாடில்லை.
அந்த வகையில், பிரதீப்பின் ஆதரவாளர் என கூறி ஒருவர், வனிதாவை தாக்கியுள்ளார். இதனை வனிதா தனது சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது, பிரதீப் ஏற்கனவே சொன்னது போல தனக்கு ரெட் கார்டு கொடுத்த யார் மீதும் தனக்கு கோவம் இல்லை என பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும், வனிதா மற்றும் ஐஷுவின் தந்தையுடன் பிரதீப்பின் உரையாடல் குறித்து ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.