படத்தில் சில காட்சிகளை Cut செய்த வலிமை இயக்குனர்.. ஹோ இதுதான் காரணமா..?

Valimai film director cuts 14 minutes scenes due to length of the film

ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கவே, அப்படி உருவானது தான் இந்த வலிமை திரைப்படம். 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் அஜித், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இப்படத்தில் பைக் சேஸிங், போதை பொருள் கடத்தல், இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் இன்னல்கள் என பலவற்றை குறித்து பேசினாலும் சில இடங்களில் சொதப்பி விட்டதாகவும், படத்தின் நீளமும் சோதிப்பதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Valimai film director cuts 14 minutes scenes due to length of the film

மேலும், வினோத்தின் முந்தைய படத்தில் இருந்த நேர்த்தி இந்த திரைக்கதையில் இல்லை எனவும், ‘இதுக்காடா இவ்வளவு பில்டப்?’ என்ற ரேஞ்சுக்கு கலாய்த்தனர்.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்ற 14 நிமிட காட்சிகளை இயக்குனர் வினோத் வெட்டியுள்ளார். இந்த புதிய வெர்ஷன் இன்று (26.02.22) முதல் தியேட்டரிலில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post