இந்த வெயிலில் மழை வரப்போகுதா.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Tamilnadu Weather Update Raining Summer Time

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு உள்ளதால் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மிதமான மழை பெய்யும்.

அதேபோல் கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1 வரை வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this post