Viral Video: 'துணிவு' - இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா.. வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டு கலாய்த்த ப்ளூ சட்டை

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் ‘துணிவு’ பட ட்ரைலரை மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
சிலர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் பட சாயலில் இருப்பதாக சொல்லி வரும் நிலையில், இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தற்போது துணிவு படம் ஹாலிவுட் படமான Inside Man-ன் காப்பி என்பது போல மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
அப்படத்தின் ட்ரைலரை எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என கூறியுள்ளார்.
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!https://t.co/bq9Id46L0s
— Blue Sattai Maran (@tamiltalkies) December 31, 2022