குழந்தைகளை கட்டித்தழுவி கொஞ்சிய நயன்தாரா.. விக்கி பதிவிட NewYear போட்டோஸ் வைரல்..

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர்.

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

இதனை தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் இந்த புது வருட பிறப்பை கொண்டாடி உள்ளனர். இதன் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

vignesh shivan posts photos of nayanthara with babies in hand

Share this post