ட்ரைலரே செம interesting'ஆ இருக்கே.. திருச்சிற்றம்பலம் படத்தின் எதார்த்தமான ட்ரைலர் வீடியோ..
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனனின் திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக ஷோபனாவும், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இதன் அறிவிப்பு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் ‘தாய் கிழவி’ ‘மேகம் கருக்காதா’ என்ற 2 பாடல்கள் வெளியானது. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு “திருச்சிற்றம்பலம்” படத்தின் மூன்றாவது பாடலுக்கான போஸ்டர் வெளியானது. வித்தியாசமான அந்த போஸ்டரில் தனுஷ் வித விதமான பல லுக்கில் இருந்தார். மிகவும் கலர்ஃபுல்லாக இருந்ததால் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது.
இசையமைப்பாளர் அனிருத், 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதையடுத்து அவர் இசையமைத்த படங்களெல்லாம் அடுத்தடுத்து ஹிட்டாகின.
தனுஷ் அனிருத் காம்போவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் உருவாகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தனுஷ், அனிருத், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தற்போது, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதன்படி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறார் தனுஷ். இவரது தந்தை பிரகாஷ் ராஜ் காவல் அதிகாரியாக உள்ளார். தந்தையின் கோபத்தால் அவ்வப்போது மனம் நொந்து போகும் நாயகனுக்கு அவரது தோழி நித்யா மேனன், தாத்தா பாரதிராஜா இருவரும் ஆறுதலாக உள்ளனர். இதற்கு இடையேராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரிடமும் தனுஷ் காதல் கொள்கிறார். இதில் யார் உடனான காதலில் இவர் வெல்வார்? மற்றும் தந்தையின் பாசத்தை தனுஷ் பெறுவாரா? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தெரிகிறது. ட்ரைலர் வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.