போதைக்கு அடிமையான ஷில்பா மஞ்சுநாத் ? வெளிப்படையாக அவரே பதிவிட்ட சர்ச்சையான வீடியோ

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

கன்னட மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான காளி படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்.

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

இதையடுத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் செம பிரபலம் பெற்ற ஷில்பா, அப்படத்தின் மூலம் இளசுகளின் மனதில் நீங்க இடத்தை பிடித்தார். மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

மலையாள மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழில் முதல் படம் காளி திரைப்படத்தில் நடித்த போதிலும், இவருக்கு இரண்டாவது படமே வெற்றி பெற்று தந்தது. மேலும் தேவதாஸ் பிரதர்ஸ் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஓணான், கன்னடத்தில் ரங்கா BE, MTech மற்றும் தமிழில் நட்ராஜ் உடன் ஒரு திரைப்படம் என சில ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

சில திரைப்படங்களில் நடித்த போதிலும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்த இவர், தற்போது ஹரூன் என்பவர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிக்கும் படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

Shilpa manjunath shares sneak peak video of her own web series web handling drugs

இந்த ஸ்னீக் பீக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத், இதன் ஒவ்வொரு காட்சியையும் என்ஜாய் பண்ணி நடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும், தயவு செய்து இவ்வாறு நடிக்க வேண்டாம் என்றும் அவரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Share this post