"Hindi தெரியாது போடா'ன்னு சொல்லிட்டு.. நீங்களே இப்டி.." நச் கேள்விக்கு Udhayanidhi சொன்ன பளீர் பதில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல் மட்டுமல்லாது சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சினிமா தயாரிப்பாளர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக இருந்த உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெயரில் குருவி, ஆதவன், மன்மதன் அம்பு போன்ற படங்களை தந்துள்ளது.
மேலும், முழு காமெடி திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, கண்ணை நம்பாதே, மாமன்னன், மனைவி கிருத்திகா டைரக்ஷனில் ஒரு படம், மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தனது ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல தமிழ் படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது முதல்முறையாக அமீர் கானின் லால் சிங் சத்தா என்னும் ஹிந்தி படத்தை செய்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு மற்றும் பிரெஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் செய்தியாளர்கள் உதயநிதியிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அப்போது, ‘ஹிந்தி தெரியாது போடா என டிசர்ட் அணிந்த நீங்கள் எப்படி ஹிந்தி படம் ரிலீஸ் செய்கிறீர்கள்’ என கேட்க, அதற்கு பதில் அளித்த உதயநிதி, ‘ஹிந்தி கற்றுக்கொள்ள கூடாது என சொல்லவில்லை, கண்டிப்பாக கற்க வேண்டும் என திணிப்பதை தான் எதிர்க்கிறோம். நான் அமீர் கானின் ரசிகன்” என உதயநிதி பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் விழாவில் பேசிய உதயநிதி, ‘முதலில் ஹிந்தி படத்தையாவது விட்டு வைக்கலாம் என்று தான் டீமிடம் சொன்னேன். ஆனால் அமீர் கான் வீடியோ காலில் என்னிடம் பேசினார். அதன் பிறகு படம் பார்க்காமலேயே ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.