'திருச்சிற்றம்பலம்' தனுஷிற்கு பெரிய Come-Back ஆக அமையுமா? லீக்கான ரிலீஸ் தேதி

Thiruchitrambalam release date has been leaked on social media

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடி-யில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய 2 படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை சந்தித்தன. அடுத்தடுத்து இரண்டு தோல்வி படங்களால், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ்.

Thiruchitrambalam release date has been leaked on social media

அதன்படி இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் அவர்கள் ஏற்கனவே, யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது 4-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

Thiruchitrambalam release date has been leaked on social media

கமர்ஷியல் படமாக தயாராகி உள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2015ம் ஆண்டு தங்கமகன் திரைப்படத்துக்குப் பின்னர் இணைந்து அனிருத் உடன் இப்படத்தில் தனுஷ் ஒன்றிணைந்துள்ளார். 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த DNA காம்போ மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Thiruchitrambalam release date has been leaked on social media

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்திம் வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post