இனி Ph.D. படிக்க P.G அவசியமில்லை.. மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் அறிவிக்கப்போகும் யூஜிசி

No pg degree is needed for phd higher studies hereafter

புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் உயர்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகால படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது

அதன்படி இந்த சிறப்பு திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அமசங்களானவை, ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது.

அதன் படி, 4 ஆண்டு இளநிலை படிப்பை படித்தால் முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி சேரலாம். இந்த படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூர கல்வி மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம்.

புதிய படிப்பில் சேருவோர் விரும்பியபோது பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர்கல்வி நிலையத்திலும் படிப்பை தொடரலாம். உயர்கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post