திருமணத்திற்கு ஓகே.. ஆனா, அர்ஜுன் மகளுக்கு கண்டீசன் போட்ட தம்பி ராமையா..!
தென்னிந்திய நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தம், இருவரும் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சென்னையில், நடைபெற்ற விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடமே திருமணம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா 2013 ஆம் ஆண்டு பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா கன்னடத்தில் பிரேம பரஹா படத்தில் நடித்தார்.
இதற்கிடையில், உமாபதி ராமையா 2017 ஆம் ஆண்டு அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மணியார் கோட்டம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சினிமா விமர்சகர் வித்தகன் தம்பி ராமையா குறித்து பேசி இருக்கிறார். அதாவது, தன் மகனின் காதலை ஏற்றுக் கொண்ட தம்பி ராமையா மருமகள் ஐஸ்வர்யாவுக்கு ஒரு கண்டிஷனை போட்டுள்ளார். அந்த கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே திருமணத்திற்கு பச்சை கொடி காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது, கல்யாணத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா நடிக்க கூடாது என்று கட்டன் ரைட்டாக கூறிவிட்டாராம்.