அந்த இடத்தில் சாமி உருவம்.. இந்து கடவுளை அவமதித்தாரா டாப்சி..? வைரலாகும் போட்டோ..!
ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி போன்ற ஹாரர் மூவிகளில் தோன்றியிருந்தார். பாலிவுட் நடிகையான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரையுலகிலும் முன்னணி நாயகியாக உள்ளார். தற்போது, சமீபகாலமாக நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்துவரும் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்து கடவுளை நடிகை டாப்ஸி அவமதித்ததாக அவர் மீது புகார் எழுந்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது, சமீபத்தில் நடிகை டாப்ஸி ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கவர்ச்சியான ஆடையில் கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றையும் அணிந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் உள்ள நெக்லஸை எப்படி அணியலாம்? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி இருந்தார்கள்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் நடிகை டாப்ஸின் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் காவல் நடிகை டாப்ஸி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்கள் எல்லாமே இந்து கடவுள் மற்றும் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அவமானப்படுத்துவதாகவும், அவர்களுடைய மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும் புகார் அளித்திருக்கிறார்.